Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
Diwali Mutton Kuzhambu: தீபாவளிக்கு இந்த பக்குவத்துல மசாலா அரைச்சு கறிக்குழம்பை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Diwali Special Mutton Kuzhambu In Tamil: தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, பலகாரத்திற்கு அடுத்தபடியாக, அந்நாளில் செய்யக்கூடிய மட்டன் குழம்பாகவே இருக்கும். அதுவும் தீபாவளி நாளில் காலையில் எழுந்து எண்ணெய் குளியலை எடுத்த பின், புத்தாடைகளை அணிந்து, ஒரு குலாப் ஜாமூனை வாயில் போட்டுக் கொண்டு, பட்டாசுகளை வெடித்துவிட்டு, சூடான இட்லிக்கு கறிக்குழம்பை செய்து சாப்பிட்டால் தான், அந்த தீபாவளியே முழுமையடையும் என்று கூறலாம்.
இந்த தீபாவளிக்கு நீங்கள் ஸ்பெஷலான கறிக்குழம்பை செய்து கொடுக்க நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இந்த கறிக்குழம்பு ஸ்பெஷலாக மசாலா அரைத்து செய்யப்படுவதால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி கறிக்குழம்பை செய்தால், இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு அட்டகாசமான தீபாவளி கறிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீபாவளி கறிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* முந்திரி - 4-5
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவி, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து
நன்கு தேங்காய் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து, 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, முந்திரியை
சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, நீர்
விட்டு வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கிளறி, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
தீபாவளி கறிக்குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications