Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு
நீங்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் பலகாரங்களை செய்வீர்களா? முக்கியமாக முறுக்கு செய்வீர்களா? அப்படியானால் இந்த வருட தீபாவளிக்கு சற்று வித்தியாசமாக கம்பு முறுக்கு செய்யுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் பலகாரங்களை செய்வீர்களா? முக்கியமாக முறுக்கு செய்வீர்களா? அப்படியானால் இந்த வருட தீபாவளிக்கு சற்று வித்தியாசமாக கம்பு முறுக்கு செய்யுங்கள். இயற்கையாகவே கம்பு நல்ல சுவையைக் கொண்டது. அதைக் கொண்டு செய்யும் முறுக்கும் நிச்சயம் அற்புதமான சுவையுடன் இருக்கும். இந்த முறுக்கு செய்ய தேவையான கம்பு மாவை அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கும். அதோடு இந்த முறுக்கு ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு கம்பு முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* கடலை மாவு - 1/8 கப்
* பொட்டுக்கடலை மாவு - 1/8 கப்
* உருக்கிய வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து மாவுடன் எள்ளு விதைகள், மிளகாய் தூள், உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை கையால் ஒருமுறை கையால் கிளறிவிடுங்கள். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் உங்களுக்கு வேண்டிய முறுக்கு அச்சுள்ள தட்டை வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து மூடிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை வேண்டிய டிசைனில் முறுக்கு போன்று ஒரு துணி/கரண்டியின் மேல் பிழிய வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு முறுக்கு தயார். இதுப்போன்று அனைத்து மாவையும் முறுக்குகளாக பிழிந்து கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications