Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா
பண்டிகை என்றால் அனைவரது வீட்டிலும் குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கி குலாப் ஜாமூன் செய்வோம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா செய்யுங்கள்.
நீங்கள் தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் பலகாரம் செய்யும் பழக்கம் கொண்டவரா? இந்த வருட தீபாவளிக்கு ஒரு வித்தியாசமான பலகாரம் செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா செய்யுங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக பண்டிகை என்றால் அனைவரது வீட்டிலும் குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கி குலாப் ஜாமூன் செய்வோம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா செய்யுங்கள்.

உங்களுக்கு குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குலாப் ஜாமூன் மிக்ஸ் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் (உடைத்தது)
* நெய் - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் மிக்ஸ், நாட்டுச் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் கலந்து வைத்துள்ள குலாப் ஜாமூன் மிக்ஸ் கலவையை ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, சிறிது நெய்யை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.
* கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
