Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
தீபாவளி ஸ்பெஷல் கேரட் லட்டு ரெசிபி
இந்த ஆண்டு தீபாவளிக்கு சற்று வித்தியாசமான பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இனிப்பு பலகாரத்தை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரட் கொண்டு லட்டு செய்யுங்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலகாரங்களை செய்வதுண்டு. இந்த ஆண்டு தீபாவளிக்கு சற்று வித்தியாசமான பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இனிப்பு பலகாரத்தை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரட் கொண்டு லட்டு செய்யுங்கள். இந்த கேரட் லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கேரட் லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1 கப் (துருவியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - 1/3 கப்
* பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், துருவிய கேரட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* கேரட் சுருங்கி, அதில் இருந்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒட்டும் பதத்தில் வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே அதை சிறு சிறு லட்டுகளாக உருட்டி, அதன் மேல் நறுக்கிய பிஸ்தாவை வைக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் லட்டு தயார்.
குறிப்பு:
* கேரட்டில் இருந்து பச்சை வாசனை போன பின்னரே கண்டென்ஸ்டு மில்க்கை சேர்க்க வேண்டும்.
* விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த கேரட் லட்டு அறை வெப்பநிலையில் ஒரு நாள் வரை நன்றாக இருக்கும். அதுவே ஃப்ரிட்ஜில் வைத்தால், 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
