Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி: பெங்காலி சம் சம் ஸ்வீட்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரது வீடுகளில் தீபாவளி பலகாரம் செய்ய தொடங்கியிருப்பார்கள். நீங்கள் இனிப்புக்களை அதிகம் விரும்புபவராயின், இந்த வருட தீபாவளிக்கு ஒரு பெங்காலி சம் சம் ஸ்வீட் ரெசிபியை செய்யுங்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரது வீடுகளில் தீபாவளி பலகாரம் செய்ய தொடங்கியிருப்பார்கள். நீங்கள் இனிப்புக்களை அதிகம் விரும்புபவராயின், இந்த வருட தீபாவளிக்கு ஒரு பெங்காலி சம் சம் ஸ்வீட் ரெசிபியை செய்யுங்கள். இது பால் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ஸ்வீட். இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். முக்கியமாக இந்த சம் சம் ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பெங்காலி சம் சம் ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி சம் சம் ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளிக்கு செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
* எலுமிச்சை சாறு - 1.5 டேபிள் ஸ்பூன்
சுகர் சிரப்பிற்கு...
* சர்க்கரை - 2 கப்
* தண்ணீர் - 5 கப்
சம் சம் செய்வதற்கு...
* ஸ்வீட் கோயா - 1 கப்
* பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் எலுமிச்சைகளை எடுத்து 1 1/2 டேபிள் ஸ்பூன் வரும் அளவில் சாறு பிழிந்து, அந்த சாற்றினை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதை இறக்கி ஒரு நிமிடம் கழித்து, எலுமிச்சை சாற்றினை சேர்த்து மெதுவாக கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிய ஆரம்பிக்கும். திரிந்த பாலில் உள்ள பன்னீரை எடுத்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசிய பின் அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, அதை ஒரு துணியில் வைத்து கட்டி, ஒரு 30 நிமிடம் தொங்க விடுங்கள்.
* 30 நிமிடம் ஆனதும், பன்னீரை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
* பின் பிசைந்த பன்னீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நீள்வட்ட வடிவில் உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீரை ஒன்றாக எடுத்து அடுப்பில் வைத்து, சர்க்கரையை முற்றிலும் கரைய வைக்க வேண்டும். சர்க்கரை முழுமையாக கரைந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள பன்னீர் உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் மூடி வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அந்த பன்னீர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பன்னீர் துண்டை எடுத்து நீளவாக்கி இரு துண்டுகளாக கீறி, அதன் நடுவே ஸ்வீட் கோயாவை சிறிது வைத்து, அதன் மேல் சிறிது பிஸ்தாவை வைத்து, துருவிய தேங்காயில் நன்கு பிரட்டி எடுத்தால், சுவையான பெங்காலி சம் சம் ஸ்வீட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

