Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபி... இந்த மாதிரி தக்காளி சட்னி அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்..
Dhaba Style Tomato Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பிரதானமான காலை மற்றும் இரவு உணவு என்னவென்றால் அது இட்லி அல்லது தோசைதான். ஏனெனில் சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன்களை செய்ய அதிக நேரம் தேவைப்படும். இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சட்னிதான். ஆனால் வழக்கமான சட்னிகளுக்குப் பதிலாக புதுப்புது சட்னிகளை முயற்சி செய்யும்போது வீட்டிலிருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக சாப்பிடுவார்கள்.
சட்னி என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். பொதுவாக தக்காளி சட்னியை நாம் ஒரே மாதிரிதான் அரைப்போம், ஆனால் வட இந்தியாவில் முற்றிலும் வேறு விதமாக தக்காளி சட்னியை அரைப்பார்கள். இந்த ஸ்டைல் தக்காளி சட்னி கொன்ஜம் வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு வட இந்திய ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வட இந்திய ஸ்டைல் தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 தக்காளி
- 5 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சட்னி அரைக்க முதலில் தக்காளியை நன்றாக கழுவி உலர்த்தி விட்டு, அதன் அனைத்து பக்கமும் தோல் கருகும்படி நெருப்பில் சுடவும். தோல் நன்றாக கருகியவுடன் தனியாக வைத்து விடவும்.
- பின்னர் பூண்டுப் பற்களைத் தோலுடன் சேர்த்து ஒரு முள் கரண்டியில் குத்தி, அடுப்பின் மீது வைத்துச் சுட்டு எடுக்கவும். அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- இதேபோல பச்சை மிளகாயையும் தோல் கருகும் அளவிற்கு சுட்டு தனியாக வைக்கவும்.
- வறுத்த தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் அனைத்தும் நன்றாக ஆறியதும், அதன் வெளித்தோலை மெதுவாக உரிக்கவும்.
- பின்னர் பூண்டு பற்களுடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பையும் சேர்த்து, உரல் மற்றும் கரண்டியைப் பயன்படுத்தி அரைகுறையான விழுதாக இடிக்கவும். அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம்.
- வறுத்து, தோல் நீக்கப்பட்ட தக்காளியை நறுக்கி, சட்னி பதத்திற்கு வரும் வரை உரல் மற்றும் உலக்கையைப் பயன்படுத்தி மெதுவாக இடிக்கவும். இல்லையெனில் இதையும் மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இதையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- பின்னர் மசித்த தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கலந்த கிண்ணத்தில், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
- உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்தால் சுவையான வட இந்திய தக்காளி சட்னி ரெடி.
- நீங்கள் விருப்பப்பட்டால் இதை நம்மூர் ஸ்டைலில் தாளித்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications