Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தஹி பன்னீர் கிரேவி
உங்களுக்கு சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இன்று தஹி பன்னீரை கிரேவியை செய்யுங்கள்.
பன்னீர் அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவுப் பொருள். ஆனால் பலருக்கு பன்னீரை எப்படி சமைப்பதென்று தெரியாது. இதுநாள் வரை நீங்கள் கடைகளில் தான் பன்னீர் ரெசிபிக்களைச் சுவைத்திருந்தீர்களானால், இன்று வீட்டிலேயே செய்யலாம். உங்களுக்கு சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இன்று தஹி பன்னீரை கிரேவியை செய்யுங்கள். தஹி பன்னீர் என்பது தயிர் கொண்டு செய்யப்படும் ஒரு பன்னீர் ரெசிபியாகும்.

உங்களுக்கு தஹி பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே தஹி பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது என்பதால், அனைவருமே முயற்சிக்கலாம். சரி, வாருங்கள் இப்போது தஹி கிரேவியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: மலாய் பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தயிர் - 1 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* சர்க்கரை - தேவையான அளவு
* உலர்ந்த வெந்தய கீரை இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்ஸியில் தயிர், கடலை மாவு, இதர மசாலாக்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
* அதன் பின் அரைத்த தயிர் கடலை மாவு கலவையை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பன்னீர் துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
* இறுதியில் காய்ந்த வெந்தய கீரை இலைகளை கையால் நசுக்கி மேலே தூவி இறக்கினால், சுவையான தஹி பன்னீர் ரெடி!



Click it and Unblock the Notifications
