For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே டேஸ்டியான தயிர் வடை செய்வது எப்படி? வட இந்திய ஸ்டைல் ரெசிபி!!

தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தயிர் வடை ரெசிபியை எல்லா நேரங்களிலும் பார்ட்டி மற்றும் பண்டிகைகளின் போதும் செய்து சுவைக்கலாம்

Posted By: R. SUGANTHI Rajalingam
|

தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தெருவோர ஸ்டைல் உணவானது வெவ்வேறு இடங்களை பொருத்து வெவ்வேறு பேர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி ஆனது காரசாரமான மசாலா பொருட்களுடன் பருப்பு பேட்டர்களை கொண்டு செய்து அப்படியே இனிப்பு சுவை கொண்ட தயிரில் முக்கி எடுத்து கொத்தமல்லி சட்னி மற்றும் மாங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான்.

இந்த தயிர் வடை ரெசிபியை எல்லா நேரங்களிலும் பார்ட்டி மற்றும் பண்டிகைகளின் போதும் செய்து சுவைக்கலாம். சட்னியுடன் இந்த தயிர் வடையை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் நாக்கு இன்னும் வேணும் வேணும் என்று விரும்பி கேட்கும். இதை அப்படியே தயிரில் முக்கி எடுக்கும் போது மென்மையாக மாறுவதால் அப்படியே உங்கள் வாயில் கரையும்.

இந்த தயிர் வடை செய்வதற்கு கொஞ்சம் நேரம் செலவாகும் என்பதால் கொஞ்சம் முன்னதாக திட்டமிட்டு கொள்வது நல்லது. சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

தயிர் வடை ரெசிபி வீடியோ

dahi bhalla
தயிர் வடை ரெசிபி / வட இந்திய ஸ்டைல் தயிர் வடையை வீட்டிலேயே செய்வது எப்படி /வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி /தகி வட ரெசிபி
தயிர் வடை ரெசிபி / வட இந்திய ஸ்டைல் தயிர் வடையை வீட்டிலேயே செய்வது எப்படி /வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி /தகி வட ரெசிபி
Prep Time
6 Hours
Cook Time
1H
Total Time
7 Hours

Recipe By: ரீத்தா தியாகி

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 4

Ingredients
  • உடைத்த கருப்பு உளுந்து - 1 கப்

    உப்பு - 11/2 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்

    பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்

    வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி இலை(நறுக்கியது) - 1 கப்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    தண்ணீர் - 1 டம்ளர்

    கெட்டித் தயிர் - 400 கிராம்

    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

    சாட் மசாலா - 1டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்

    மாங்காய் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி சட்னி - 1டேபிள் ஸ்பூன்

    மாதுளை பழ விதைகள் - அலங்கரிக்க

Red Rice Kanda Poha
How to Prepare
    1. உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்.
    2. அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
    3. இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்
    4. வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.
    5. இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும்.
    6. இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
    7. வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
    8. அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
    9. நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.
    10. பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும்
    11. அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.
    12. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.
    13. மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.
Instructions
  • 1. வடையின் மேல் பூந்திகளை தூவி விட்டால் இன்னும் மொறு மொறுப்பான சுவை கிடைக்கும்.
  • 2. இந்த வடையுடன் பப்டி, வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து பரிமாறினால் தயிர் வடை சாட் ரெடியாகி விடும்
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 2 வடை
  • கலோரிகள் - 191
  • கொழும்பு - 9.6 கிராம்
  • புரோட்டீன் - 6.3 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 28.9 கிராம்
  • சர்க்கரை - 3.8 கிராம்
  • நார்ச்சத்து - 2.4 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் :தயிர் வடை ரெசிபி செய்வது எப்படி

1. உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்.

2. அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

3. இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்

4. வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.

5. இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும்.

6. இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

7. வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.

8. அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்

9. நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.

10. பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும்

11. அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

12. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.

13. மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.

[ of 5 - Users]
English summary

தயிர் வடை ரெசிபி / வட இந்திய ஸ்டைல் தயிர் வடையை வீட்டிலேயே செய்வது எப்படி /வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி /தகி வட ரெசிபி

Dahi bhalla recipe is a popular street food of North India. There are versions of this snack made in other parts of the country as well.
Story first published: Monday, October 23, 2017, 10:35 [IST]
Desktop Bottom Promotion