Latest Updates
-
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம்
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது!
Karuvepillai Idli Podi Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது சிரமமாக உள்ளதா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி அரைக்காத நாட்களில் இட்லி பொடியைத் தான் சாப்பிடுவோம். இந்த இட்லி பொடியை பலவிதங்களில் செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லி பொடி ரொம்ப பிடிக்குமா? இதனால் எப்போதும் உங்கள் வீட்டில் இட்லி பொடி ஸ்டாக்கில் இருக்குமா?

ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் இட்லி பொடியை அரைப்பீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் இட்லி பொடி அரைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கறிவேப்பிலை இட்லி பொடியை செய்யுங்கள். இந்த இட்லி பொடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கறிவேப்பிலை இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* புளி - 4 சிறிய துண்டுகள்
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு
மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி விதைகள் மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் பிரஷ்ஷான கறிவேப்பிலையை சேர்த்து, ஈரப்பதம்
போகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து கிளறி இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை நன்கு குளிர வைத்து, காற்றுப் புகாத டப்பாவில்
போட்டுக் கொண்டால், சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications
