Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான.. கறிவேப்பிலை பெப்பர் சிக்கன்
Curry Leaf Pepper Chicken: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியிருக்கிறீர்களா? சற்று வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபியை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கறிவேப்பிலை பெப்பர் சிக்கனை முயற்சி செய்யுங்கள்.
இந்த கறிவேப்பிலை பெப்பர் சிக்கன் மிகவும் சுவையாக இருப்பதோடு, அற்புதமான சைடு டிஷ்ஷாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை பெப்பர் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்படுள்ளது. அதைப் படித்த செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/4 கிலோ
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை பொடி செய்வதற்கு..
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை பொடிக்கு
கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து
நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை
சேர்த்து, சிறிது கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள் மற்றும் அரைத்த கறிவேப்பிலை பொடியை
சேர்த்து கிளற வேண்டும்.
* அடுத்து அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து சிக்கனை ஒரு 10
நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை பெப்பர் சிக்கன்
தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications