Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தயிர் கத்திரிக்காய் கிரேவி
சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக இதுவரை வீட்டில் செய்திராத ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் மற்றும் தயிர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் இதுவரை வீட்டில் செய்திராத ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் மற்றும் தயிர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. மேலும் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தயிர் கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் கத்திரிக்காய் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1-1/2 டீஸ்பூன்
* சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 3
* எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - தேவையான அளவு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் தயிர் கடலை மாவு கலவை, மசாலாப் பொடிகள் என அனைத்தையும் சேர்த்து ஒருசேர கிளறி விட வேண்டும்.
* பின்னர் வதக்கி குளிர வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவுடன் கத்திரிக்காய் நன்கு ஒன்றுசேரும் வரை கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தயிர் கத்திரிக்காய் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications