Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
வீட்டுல வெண்டைக்காய் இருக்கா? ஈவ்னிங் டைம்-ல இப்படி பக்கோடா செய்யுங்க.. செமயா இருக்கும்..
Vendakkai Pakoda Recipe: தற்போது பனி அதிகம் பொழிகிறது. மாலை வேளை வந்தாலே, நன்கு சூடாக காபி, டீ குடிக்கும் போது, மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று பலருக்கும் தோன்றும். பொதுவாக ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்றாலே பஜ்ஜி, போண்டா, பக்கோடா, வடை தான் நம் நினைவிற்கு வரும்.
அதுவும் இவற்றை செய்ய பெரும்பாலும் வெங்காயம், உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஆகியவற்றை தான் பயன்படுத்துவோம். ஆனால் உங்கள் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால், அதைக் கொண்டும் அருமையான சுவையில் வெண்டைக்காய் பக்கோடா செய்யலாம்.

வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த வெண்டைக்காய் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இதுவரை வெண்டைக்காய் பக்கோடாவை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருந்தால், இன்று அதை வீட்டிலேயே முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு வெண்டைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 20
* கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைக்க
வேண்டும்.
* பின் அதன் முனைகளை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து,
அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, சிறிது நீரைத் தெளித்து நன்கு
கையால் பிரட்டி விட வேண்டும்.
* பிறகு பிரட்டியதை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள
வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் பொரித்து
எடுத்தால், சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
குறிப்பு:
* வெண்டைக்காயின் பிசுபிசுப்புத்தன்மை குறைய வெண்டைக்காயை
நறுக்கியதும், 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின்
பயன்படுத்துங்கள்.
* விருப்பமுள்ளவர்கள், அத்துடன் சிறிது வெங்காயத்தையும் மெல்லிய நீளத்
துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications










