Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... மொறுமொறுப்பான... ராகி போண்டா
உங்கள் வீட்டில் இட்லி மாவு மற்றும் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் ராகி போண்டா செய்து கொடுங்கள். இந்த ராகி போண்டா செய்வது மிகவும் சுலபம் மற்றும் காபி, டீயுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இட்லி மாவு மற்றும் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் ராகி போண்டா செய்து கொடுங்கள். இந்த ராகி போண்டா செய்வது மிகவும் சுலபம் மற்றும் காபி, டீயுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம். இது நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ராகி போண்டா எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 2 கப்
* சிறிய கேரட் - 1
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* ராகி மாவு - 1/2 கப் முதல் 3/4 கப் வரை
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கறிவேப்பிலை, ராகி மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், போண்டா மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ராகி போண்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications