Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஈவ்னிங் டைம்-ல 2 உருளைக்கிழங்கு வெச்சு இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...
Potato Kurkure Recipe In Tamil: விடுமுறை நாட்களில் மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் மற்றும் குழந்தைகள் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு பிரியரா?
அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு மாலை வேளையில் ஒரு அட்டகாசமான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை செய்து கொடுங்கள். இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு குர்குரே குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு குர்குரே ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குர்குரே ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1/2 கப்
* ரவை - 1/2 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரில் உருளைக்கிழங்குகளைப் போட்டு, கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன்
தோலை நீக்கி விட வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1/2 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு
சூடானதும், அடுப்பை அணைத்துவிட்டு, அந்நீரில் 1/2 கப் ரவையை சேர்த்து
நன்கு கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு உருளைக்கிழங்குகளை கைகளால் நன்கு பிசைந்தோ அல்லது துருவியோ,
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த உருளைக்கிழங்குடன் ஊற வைத்த ரவையை சேர்த்து, கைகளால்
நன்கு கட்டிகளின்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகம், சில்லி ப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, அதோடு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்ததை சிறிது எடுத்து,
நீளவாக்கில் உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்
போன்று அனைத்து மாவையும் உருட்டி தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, உருட்டி
வைத்துள்ளதை ஒவ்வொன்றாக சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான உருளைக்கிழங்கு குர்குரே தயார்.
Image Courtesy: Mann vaasam



Click it and Unblock the Notifications