Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
1 கப் பச்சரிசியும், 2 உருளைக்கிழங்கும் வெச்சு.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
Crispy Mini Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பச்சரிசியும், உருளைக்கிழங்கும் இருந்தால், அட்டகாசமான சுவையில் மொறுமொறுப்பான மினி போண்டாவை செய்து கொடுங்கள். இந்த மினி போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த மினி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மினி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் கழுவிய அரிசியில் நீரை ஊற்றி மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து அதன்
தோலை நீக்கிவிட வேண்டும். , அவற்றை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஊற வைத்த
பச்சரிசியை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய் மற்றம் இஞ்சி சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சீரகம், சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை எடுத்து கொஞ்சம்
கொஞ்சமாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான
மினி போண்டா தயார்.
Image Courtesy: Awesome Cuisine



Click it and Unblock the Notifications