Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
4 பொருள் இருந்தா போதும்... மொறுமொறுப்பான... ப்ரைடு பாஸ்தா செய்யலாம் தெரியுமா?
Crispy Fried Pasta Recipe: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது வேண்டும் என்று கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பஜ்ஜி, போண்டா செய்ய பொருட்கள் எதுவும் இல்லையா? கவலை வேண்டாம்.
உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அந்த பாஸ்தாவைக் கொண்டு நொடியில் ஒரு அட்டகாசமான மற்றும் மொறுமொறுப்பான ப்ரைடு பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த ப்ரைடு பாஸ்தா செய்வதற்கு 4 பொருட்கள் இருந்தால் போதும், சூப்பரான சுவையில் அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் தயார்.

இந்த ப்ரைடு பாஸ்தா குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் இதை ஒருமுறை செய்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு ப்ரைடு பாஸ்தா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ரைடு பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாஸ்தாவை வேக வைப்பதற்கு...
* பாஸ்தா - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
பொரிப்பதற்கு..
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அதில்
சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து, நீரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து, நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பாஸ்தா நன்கு வெந்ததும், அதை இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த
நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்த பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 1
டீஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்கு
பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பாஸ்தாவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூளைத் தூவி நன்கு
கிளறினால், சுவையான ப்ரைடு பாஸ்தா தயார்.
Image Courtesy: foodyshoody



Click it and Unblock the Notifications