Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு குடைமிளகாய் வெச்சு இப்படி15 நிமிடத்தில் க்ரீமியான சைடு டிஷ் செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்..
Creamy Capsicum Masala Recipe In Tamil: வீட்டில் நீங்கள் சப்பாத்தி அதிகமாக செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் ரெஸ்டாரண்ட்டில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று நன்கு க்ரீமியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு இந்த ஸ்டைலில் சைடு டிஷ் செய்யுங்கள். சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த சைடு டிஷ் செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட 2 சப்பாத்தியை அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு க்ரீமியான குடைமிளகாய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* முந்திரி - 6-7
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 3
* ஏலக்காய் - 1
* உப்பு - சிறிது
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* குடைமிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு, மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், துண்டுகளாக்கப்பட்ட குடைமிளகாயை சேர்த்து, சிறிது உப்பு
தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்
சுவையான மற்றும் க்ரீமியான குடைமிளகாய் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications