Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
கொத்தமல்லி கூட தக்காளியை சேர்த்து இப்படி ஒரு தடவ சட்னி செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்...
Tomato Coriander Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், கொத்தமல்லியுடன், தக்காளியையும் சேர்த்து சட்னி செய்து பாருங்கள். சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த தக்காளி மல்லி சட்னி செய்வதென்று சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு- 10 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - 1 கட்டு
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* புளி - 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பிறகு வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து கொத்தமல்லியை நீரில் அலசி அதையும் சேர்த்து, மல்லி
சுருங்கும் வரை வதக்கி தேங்காய் சேர்த்து ஒரு 30 நொடிகள் வதக்கி
இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
தக்காளி, பச்சை மிளகாய், புளி சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும்
வரை வதக்கி இறக்கி அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து பொரிந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான தக்காளி மல்லி சட்னி தயார்.
Image Courtesy: Niki's Kitchen



Click it and Unblock the Notifications