Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Coriander Coconut Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லியை வைத்து வித்தியாசமான சட்னி செய்யுங்கள். அதுவும் கொத்தமல்லி சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை வித்தியாசமானதாகவும், சூப்பராகவும் இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி கொத்தமல்லி சட்னியை செய்தால், அதற்குப்பின் பழைய சட்னியை மறந்து விடுவீர்கள். இதில் கூடுதலாக சேர்க்கும் அந்த ஸ்பெஷல் பொருள் எலுமிச்சைசாறு. இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த வித்தியாசமான கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- அரை கப் துருவிய தேங்காய்
- 1/2 கப் கொத்தமல்லி இலைகள்
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 கப் சூடான கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- இந்த சூப்பரான சட்னியை அரைக்க முதலில் ப்ரெஷான தேங்காய், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை மிக்ஸி கிரைண்டரில் போட்டு, அது மென்மையாகும் வரை அரைக்கவும்.
- மிக்ஸியின் மூடியைத் திறந்து, 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
- பச்சை கொத்தமல்லி மற்றும் தேங்காய் சட்னியை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பைச் சேர்த்து, பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை சில நொடிகள் வதக்கவும்.
- இறுதியாக இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான பச்சைக் கொத்தமல்லி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications