Just In
- 5 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 34 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நாக்கை சப்பு கொட்ட வைக்கும், காரசாரமான க்ரீன் சட்னியை 15 நிமிடத்தில் செய்வது எப்படி?
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் காரசாரமான க்ரீன் சட்னி வெறும் 15 நிமிடங்களில் எப்படி தயாரிக்கலாம் என்று பட விளக்கத்தோடு இங்கே சொல்லப்பட்டுள்ளது.
கொத்தமல்லி சட்னி ரெசிபி அல்லது க்ரீன் சட்னி ரெசிபி மிகவும் சுவையானது. இதை சாட்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும். இதன் ருசி டேங்கியாகவும்(tangy), காரமாகவும் இருக்கும். இது இந்திய ஸ்நாக்ஸ் வகைகளுக்கு கலரூட்ட பயன்படுகிறது. இந்த க்ரீன் சட்னி இல்லாமல் சாட் சாப்பிட்டால் எந்த வித திருப்தியும் ஏற்படுவதில்லை என்பது நிறைய விரும்பிகளின் கருத்து. இது சான்ட்விச் போன்றவற்றிலும் பயன்படுகிறது.
இந்த க்ரீன் சட்னி யை தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து ஒரு வாரம் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இது சீக்கிரமாக கெட்டுப் போகாது. இதை எளிதாக நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். சரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்கத்துடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி சட்னி ரெசிபி வீடியோ
Recipe By: ரீடா த்யாகி
Recipe Type: ரெசிபி வகை : சுவையூட்டும் ரெசிபி
Serves: பரிமாறும் அளவு :1ஜார்
-
கொத்தமல்லி இலைகள் - 1 பெரிய பெளல் (நறுக்கியது)
மாங்காய் - 1 சிறியது (தோலுரித்து மற்றும் வெட்டிக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 மீடியம் சைஸ் (தோலுரித்து மற்றும் வெட்டி கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 8-10 சிறியது
இஞ்சி - 2 inch (தோலுரித்தது)
உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சுகர்-2 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்
-
1. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.
2. பிறகு வழுவழுவென நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
- 1. கொத்தமல்லி இலைகளை நன்றாக நீரில் கழுவி அதிலுள்ள மணல் துகள்கள் போன பிறகு பயன்படுத்தவும்.
- 2. சட்னி அரைக்கும் போது தண்ணீர் தேவைப்பட்டால் 2-3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
- 3. இதனுடன் புதினா இலைகளை சேர்த்து கொண்டால் புதுவிதமான மணக்கும் சுவை கிடைக்கும். இதற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பயன்படுத்தினால் இன்னும் டேஸ்டியாக இருக்கும்.
- 4. இதை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
- பரிமாறும் அளவு - 1 டேபிள் ஸ்பூன்
- கலோரிகள் - 4 cal
- கொழுப்பு - 0.1கிராம்
- புரோட்டீன்ஸ் - 0.3 கிராம
- கார்போஹைட்ரேட் - 0.7 கிராம்
- நார்ச்சத்து - 0.4 கிராம்
செய்முறை
1.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.
2.பிறகு வழுவழுவென நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.