Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
சப்பாத்திக்கு பன்னீரை வெச்சு இப்படி சப்ஜி பண்ணுங்க.. 1 சாப்பிடுறவங்க 2 எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவாங்க...
Cooker Paneer Sabji Recipe: தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நல்ல சுவையான உணவை சமைத்து சாப்பிடத் தோன்றும். உங்களுக்கும் அப்படி தான் உள்ளதா? இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சுவையில் சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு சப்ஜி செய்யுங்கள். இந்த பன்னீர் சப்ஜி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் சப்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சப்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 3 (நறுக்கியது)
* தண்ணீர் - 1 கப்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 100 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி - 1 இன்ச்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, 1 கப் நீரை ஊற்றி
கிளறி குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனது, குக்கரைத் திறந்து மத்து கொண்டு மசித்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பன்னீர் துண்டுகள் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ப்ரை
செய்ய வேண்டும்.
* பின் ப்ரை செய்த பொருட்களை மசித்த சப்ஜியுடன் சேர்த்து கிளறி,
அத்துடன் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லயைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான குக்கர் பன்னீர் சப்ஜி தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications