Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2 ரூபா காபித் தூள் இருந்தா.. ஈவ்னிங் ஒருவாட்டி இப்படி காபி போட்டு குடிங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Cold Coffee Recipe In Tamil: நீங்கள் காபி பிரியரா? அடிக்கடி காபி குடிப்பீர்களா? உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கப்படும் காபி என்றால் பிடிக்குமா? அதுவும் கோல்ட் காபி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த கோல்ட் காபியை வீட்டிலேயே செய்து குடியுங்கள். அதுவும் வெறும் 2 ரூபாய் காபித் தூள் இருந்தால், அதைக் கொண்டே அருமையான சுவையில் கோல்ட் காபியை செய்யலாம்.
அதுவும் இந்த காபி கடைகளில் விற்கப்படும் காபியைப் போன்று மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இப்படி காபி போட்டு கொடுத்தால், அடிக்கடி இப்படி காபி போட்டு கொடுக்க சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு வீட்டிலேயே க்ரீமியான கோல்ட் காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோல்ட் காபி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காபித் தூள் பாக்கெட் - 1
* சர்க்கரை - 3 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* ஐஸ் கட்டிகள்- 6 + தேவையான அளவு
* காய்ச்சிய கெட்டியான பால்
* பூஸ்ட் அல்லது சாக்லேட் சாஸ்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் காபித் தூளை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 3 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் மீண்டும் 3 ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பீட்டர் கொண்டு நன்கு 1 நிமிடம் அடிக்க வேண்டும். அப்படி
அடிக்கும் போது கலவையானது க்ரீம் போன்று சற்று கெட்டியாகும்.
* பின் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் சிறிது பூஸ்ட்டை தூவ
வேண்டும் அல்லது சிறிது சாக்லேட் சாஸை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் 2 ஐஸ் கட்டிகளை போட்டு, அதில் அடித்து வைத்துள்ள
க்ரீம்மை சேர்க்க வேண்டும்.
* அடுத்து நன்கு காய்ச்சி குளிர வைத்த கெட்டியான பாலை சிறிது ஊற்ற
வேண்டும்.
* பின் அதன் மேல் மீண்டும் க்ரீம்மை சிறிது சேர்க்க வேண்டும்.
* இறுதியாக மேலே பூஸ்ட் தூவி பரிமாறினால், சுவையான மற்றும் க்ரீமியான
கோல்ட் காபி தயார்.



Click it and Unblock the Notifications