Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தக்காளி சட்னியை இந்த பொருள் சேர்த்து ஒருதடவை அரைச்சு பாருங்க... இனிமே வேற சட்னி அரைக்கவே மாட்டிங்க...!
Coconut Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி.
தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்யும் போதுதான் முழுமையான சுவை கிடைக்கும். ஆனால் தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் வேறுசில பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான சட்னிதான் தக்காளி தேங்காய் சட்னி.

உங்களுக்கு தக்காளி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 10 சின்ன வெங்காயம்
- 4 வர மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
- 3 நடுத்தர அளவிலான தக்காளி
- ½ கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் உரித்த சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின்னர் வர மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து வாசனை வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைப் கடாயில் சேர்க்கவும். உப்பு சேர்த்து, அவ்வப்போது கிளறிவிட்டு, தக்காளி மென்மையாகவும் கூழ் போலவும் மாறும் வரை வதக்கவும்.
- அதன்பின் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பை அணைத்து, கலவையை அறை வெப்பநிலைக்கு ஆறும் வரை விடவும்.
- ஆறிய பின் இந்த கலவையை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பின்னர் மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி சட்னியுடன் சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெயைக் காய வைக்கவும். கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- தீயைக் குறைத்து மிதமான சூட்டில் வைத்து, உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமானதும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- அடுப்பை அணைத்து தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான தேங்காய் தக்காளி சட்னி ரெடி.
- இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications