Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
ரசத்தை ஒருடைம் தேங்காய் சேர்த்து இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Coconut Rasam Recipe In Tamil: மதிய வேளையில் உங்கள் வீட்டில் எப்போதும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் ரசத்தை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ரசம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் அரைத்து ஊற்றி ஒருமுறை ரசம் செய்யுங்கள்.
இந்த தேங்காய் ரசம் உண்மையிலேயே இதுவரை நீங்கள் சுவைத்திராத ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த ரசத்தை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த ரசத்தை ஒருமுறை வீட்டில் செய்தால், பின் இந்த ஸ்டைலில் தான் அடிக்கடி ரசம் வைக்க சொல்லி வீட்டில் உள்ளோர் கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த தேங்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* புளி நீர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர் + தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, 6 பல் பூண்டு,
கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், புளி நீர், 1/2 டம்ளர் நீர் சேர்த்து,
அடுப்பில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை ஊற்றி, 2 டம்ளர் நீரை ஊற்றி, 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கொதி
விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்கு
வதக்கி இறக்கி, ரசத்துடன் சேர்த்து கலந்து, சிறிது நறுக்கிய
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தேங்காய் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications