Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெறும் 2 பொருள் இருந்தா போதும்... 90ஸ் கிட்ஸ் பெட்டி கடையில் வாங்கி சாப்பிட்ட இந்த ஸ்வீட்டை செய்யலாம்...
Coconut Mittai Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் ஸ்வீட் அதிகம் சாப்பிடுவார்களா? அடிக்கடி ஏதாவது ஸ்வீட் வாங்கி கொடுக்குமாறு அடம் பிடிப்பார்களா? கடைகளில் விற்கப்படும் ஸ்வீட்டை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு வீட்டிலேயே ஸ்வீட் செய்தால், அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் அது சத்தானதும் கூட.
சரி, அப்படி என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம் 90ஸ் கிட்ஸ்கள் பெட்டிக் கடைகளில் அதிகம் வாங்கி சாப்பிட்ட ஒரு அட்டகாசமான ஸ்வீட் குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இந்த ஸ்வீட் செய்வதற்கு வெறும் 2 பொருட்களே போதுமானது. இந்த ஸ்வீட்டை உரல் மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேங்காய் பர்பி என பலவாறு அழைப்பார்கள்.

உங்களுக்கு இந்த தேங்காய் ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தேங்காய் மிட்டாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப
* தண்ணீர் - 1/4 கப்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* நெய்
செய்முறை:
* முதலில் தேங்காயை எடுத்து, அதன் அடிப்பகுதியில் உள்ள ப்ரௌன் நிற
பாகத்தை நீக்கிவிட்டு, அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த தேங்காயை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே கப் அளவில் வெல்லத்தை பொடித்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு,
1/4 கப் நீரை ஊற்றி, வெல்லத்தைக் கரைத்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயை சேர்த்து
ஈரப்பதம் போய், கட்டிகளின்றி மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெல்ல நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, எதிலும் ஒட்டாமல் நன்கு ஒரு பதத்திற்கு வந்ததும், அதை இறக்க
வேண்டும்.
* பின் ஒரு தட்டில் நெய்யை தடவி, இந்த கலைவையை அதில் வைத்து சூடு
குறைந்து வெதுவெதுப்பான நிலைக்கு வரும் வரை ஆற வைக்க வேண்டும்.
* கலவையானது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், சிறிது கலவையை எடுத்து,
உருண்டையாக உருட்டி அதன் நடுவே ஒரு பாட்டில் மூடியை வைத்து அழுத்தி
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து கலவையையும் செய்தால், சுவையான உரல் மிட்டாய்
அல்லது தேங்காய் மிட்டாய் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications