Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Coconut Mint Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? தற்போது வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் புதினாவை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுவும் இட்லி, தோசைக்கு புதினாவுடன், தேங்காயை சேர்த்து சட்னி செய்யும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அதோடு இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

இந்த தேங்காய் புதினா சட்னி ரெசிபி குறித்து ஹேமா சுப்ரமணியன் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த தேங்காய் புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* புதினா - 1 கையளவு
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் புதினாவை சேர்த்து ஒருமுறை கிளறி, பொட்டுக்கடலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்தற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
சுவையான தேங்காய் புதினா சட்னி தயார்.
தேங்காய் புதினா சட்னியின் ஆரோக்கிய நன்மைகள்
1. இந்த சட்னியில் உள்ள புதினா நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவற்றை வழங்குகிறது.
2. இந்த சட்னியில் இருக்கும் தேங்காயில் லாரிக் அமிலம் உள்ளது. இது இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
3. இந்த சட்னியில் இருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய் உடலுக்கு கூடுதலாக அழற்சி எதிர்ப்பு சக்தியை வழங்கி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.



Click it and Unblock the Notifications