Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
1/2 மூடி தேங்காயும், 1 ஸ்பூன் காபித் தூளும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத செய்யுங்க.. செமயா இருக்கும்..
Coconut Milk Pudding Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஸ்வீட் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு கடைகளில் ஸ்வீட்டை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஸ்வீட் செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் 1/2 மூடி தேங்காயும், 1 ஸ்பூன் காபித் தூளும் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு புட்டிங் செய்யலாம். இந்த தேங்காய் பால் புட்டிங்கை வீட்டு விஷேசங்களின் போதும் செய்யலாம். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இதை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.

உங்களுக்கு தேங்காய் பால் புட்டிங்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* காபித் தூள் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 1 1/2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொடியாக நறுக்கிய பாதி மூடி தேங்காயை
சேர்த்து, அத்துடன் காபித் தூள், 2 ஏலக்காயை சேர்த்து, முதலில்
ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டி
பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கட்டிகளின்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நெய் ஊற்றி தடவி, வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி,
கெட்டியாகும் வரை தொடர்ந்து கைவிடாமல் கிளறி விட வேண்டும்.
* கலவையானது கெட்டியாகத் தொடங்கியதும், அதில் சர்க்கரையை சேர்த்து
கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் நெய்யை தடவி, தயாரான அல்வாவை சேர்த்து, அறை
வெப்பநிலைக்கு வந்ததும், செட் ஆவதற்கு ஃப்ரிட்ஜ்ஜில் 2 மணிநேரம்
வைத்து எடுக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, அந்த கிண்ணத்தில் ஃபிரிட்ஜ்ஜில் இருந்து வெளியே
எடுத்து, குப்புற போட்டு தட்டி கிண்ணத்தை நீக்கிவிட்டு, மேலே சிறிது
வெள்ளை எள்ளு விதைகளை தூவினால், சுவையான தேங்காய் பால் புட்டிங்
தயார்.



Click it and Unblock the Notifications