Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
மணமணக்கும்.. ருசியான.. தேங்காய் பால் முட்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Thengai Pal Muttai Kuzhambu Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் மதியம் என்ன சமைப்பது என்று முடிவெடுப்பது கஷ்டமாக உள்ளதா? உங்களின் வசதிக்காகவே மதிய வேளையில் செய்வதற்கு ஏற்றவாறான பொரியல், கூட்டு, சாம்பார், குழம்பு என்று தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது முட்டை குழம்பை பற்றி தான்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று முட்டை குழம்பை செய்யாமல், கெட்டி தேங்காய் பால் எடுத்து சேர்த்து முட்டை குழம்பு செய்யுங்கள். இப்படி முட்டை குழம்பை செய்யும் போது, அது சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதோடு இப்படி ஒருமுறை முட்டை குழம்பை செய்தால் பின் வீட்டில் உள்ளோர் எப்போதும் இந்த சுவையில் தான் செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 5
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகு - 4
* கசகசா - 1/2 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தேங்காய் பால் - 150 மிலி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேக வைத்த முட்டை - 7
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு மற்றும்
கசகசாவை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் வேக வைத்த முட்டைகளை எடுத்து, ஆங்காங்கு கத்தியால் கீறி
விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், குழம்பு
மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில்
வைத்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி,
சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து, கறிவேப்பிலை தூவி
மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வேக வைத்து கீறி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து
கிளறி, கொத்தமல்லியைத் தூவி, மூடி வைத்து மீண்டும் 3-4 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தேங்காய் பால் முட்டை குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications