Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஒரே மாதிரி தேங்காய் சட்னி அரைக்காம இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Coconut Milk Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அவற்றிற்கு எப்போதும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இந்த சட்னியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இது நீங்கள் இதுவரை சாப்பிடாத அளவிற்கு வித்தியாசமான சுவையில் இருக்கும்.
இந்த சட்னியின் தனித்துவமான சுவைக்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்தான். அது வேறு ஒன்றுமில்லை தேங்காய்ப்பால்தான், அதுமட்டுமின்றி இதில் சேர்க்கப்படும் சீரகத்தூள், கொத்தமல்லி போன்றவை இதன் சுவையை மேலும் அதிகரிக்கும். இந்த தேங்காய்ப்பால் சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

முக்கியமாக இப்படி தேங்காய்ப்பால் சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சட்னியை தொட்டு சாப்பிடாமல், ஊற்றி ஊற வைத்து பிசைந்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு இந்த தேங்காய்ப்பால் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய்ப்பால் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் தேங்காய்ப்பால்
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 1 துண்டு இஞ்சி
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- 4 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- அரை டீஸ்பூன் சீரகத் தூள்
தாளிக்க:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கருப்பு கடுகு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 3 வர மிளகாய்
செய்முறை:
- தேங்காய்ப்பால் தவிர சட்னிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சரியான அளவில் எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் ஒரு கப் தேங்காய்ப்பாலை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- அனைத்தும் நன்கு கலக்கும் படி நன்றாக அரைக்கவும். தேவைப்பட்டால் உப்பின் அளவை சரி பார்க்கவும்.
- காரத்தின் அளவை அதற்கேற்ப சரிசெய்து கொள்ளலாம்.
- இந்த சட்னி கொஞ்சம் தண்ணி பதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். எனவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இந்த சட்னியின் சுவைக்கு அதை தாளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.
- எண்ணெய் சூடனத்தில் அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்க்கவும்.
- வர மிளகாய் நிறம் மாறியதும் பெருங்காயத்தை சேர்த்து சட்னி மீது கொட்டினால் சுவையான தேங்காய்ப்பால் சட்னி ரெடி!
- இதை சூடான இட்லி, ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications