Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
தேங்காய் லட்டு ரெசிபி : சுண்டக் காய்ச்சிய பாலுடன் நாரியல் லட்டு
தேங்காய் லட்டு பல விழாக்களின் போது இந்தியர்களால் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இதை உலர்ந்த தேங்காய் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யலாம். இங்கே இதை எப்படி செய்வது என்ற வீடியோ மற
தேங்காய் லட்டு ரெசிபி இந்தியர்களால் பல விழாக்களின் போதும், வீட்டின் சுப நிகழ்ச்சிகளின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் சுவையான ருசி மிகுந்த நட்ஸூடன் கூடிய நறுமணத்தை தருகிறது.
இந்த நாரியல் லட்டுவின் லட்டு மற்றும் அதன் ஜூஸ் எத்தனை தடவை
சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டும் சுவை மிகுந்தது.
வாயில் போட்டால் அப்படியே கரையும் இனிப்பாக உள்ளது. முதன் முதலில்
செய்பவர்களுக்கு மிகவும் எளிதாகவும் விரைவில் செய்யக் கூடியதாகவும்
உள்ளது. இது கண்டிப்பாக உங்கள் இனிப்பு பசியை தீர்த்து வைக்கும்.
சரி நீங்கள் இந்த தேங்காய் லட்டை எப்படி செய்வது என்பதை வீடியோ
மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் பின்வருமாறு
காணலாம்.
தேங்காய் லட்டு ரெசிபி வீடியோ

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சுவீட்ஸ்
Serves: 8-10 லட்டுகள்
-
1. உலர்ந்த வறுத்த தேங்காய் துருவல் - 2 கப் +1 கப் லட்டை சுற்றி கவர் பண்ணுவதற்கு
2. இனிப்பான சுண்டக் காய்ச்சிய பால் (மில்க்மைடு) - 200 கிராம்
3. நறுக்கிய பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் + அலங்கரிக்க
4. ஏலக்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
-
1. அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு சுண்டக் காய்ச்சிய பாலை ஊற்றி உடனே வறுத்த தேங்காய் துருவலையும் போட்டு கலக்க வேண்டும்.
2. நன்றாக கலந்து கொண்டே கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளர வேண்டும். கடாயில் ஒட்ட விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை போட்டு கிளற வேண்டும்.
4. இப்பொழுது இந்த தேங்காய் கலவையை நல்லா வட்ட வடிவ பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
5. இந்த பந்தை உலர்ந்த தேங்காய் துருவலில் எல்லா பக்கங்களிலும் படும் படி பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
6. பிறகு பாதாம் பருப்பை மேல் தூவி அலங்கரிக்க வேண்டும்.
- 1.நீங்கள் அப்பொழுது துருவிய தேங்காயில் லட்டு பண்ண வேண்டும் என்று நினைத்தால் அதன் ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொண்டு பயன்படுத்தவும்.
- 2.கடாயில் தேங்காய் கலவையானது நன்றாக ஒட்டாத படி கிளற வேண்டும். ஓட்டினால் அடுப்பை அணைத்து விட்டு கிளறிக் கொள்ளவும்.
- 3.தேங்காய் கலவை சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்து விடவும். கலவை ஆறினால் உருண்டை பிடிக்க வராது.
- பரிமாறும் அளவு - 1 லட்டு
- கலோரிகள் - 54
- புரோட்டீன் - 1 கிராம்
- கார்போஹைட்ரேட் - 9 கிராம்
- சுகர் - 9 கிராம்
படிப்படியான செய்முறை - தேங்காய் லட்டு செய்வது எப்படி
1. அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு சுண்டக் காய்ச்சிய பாலை ஊற்றி உடனே வறுத்த தேங்காய் துருவலையும் போட்டு கலக்க வேண்டும்.
2. நன்றாக கலந்து கொண்டே கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளர வேண்டும். கடாயில் ஒட்ட விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை போட்டு கிளற வேண்டும்.
4. இப்பொழுது இந்த தேங்காய் கலவையை நல்லா வட்ட வடிவ பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
5. இந்த பந்தை உலர்ந்த தேங்காய் துருவலில் எல்லா பக்கங்களிலும் படும் படி பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
6. பிறகு பாதாம் பருப்பை மேல் தூவி அலங்கரிக்க வேண்டும்.

Click it and Unblock the Notifications