Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தேங்காய் தயிர் சட்னி
இதுவரை நீங்கள் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி செய்து சுவைத்திருப்பீர்கள். தேங்காய் சட்னியிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் இன்னும் ஒரு வித்தியாசமான தேங்காய் சட்னி உள்ளது. அது தான் தேங்காய் தயிர் சட்னி.
இதுவரை நீங்கள் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி செய்து சுவைத்திருப்பீர்கள். தேங்காய் சட்னியிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் சிலர் பச்சை மிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியும், இன்னும் சிலர் வரமிளகாய் சேர்த்தும் தேங்காய் சட்னியும் செய்வதுண்டு. ஆனால் இன்னும் ஒரு வித்தியாசமான தேங்காய் சட்னி உள்ளது. அது தான் தேங்காய் தயிர் சட்னி. இந்த தேங்காய் தயிர் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, ஊத்தாப்பம், மெதுவடை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் தயிர் சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. கீழே தேங்காய் தயிர் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய்- 1-2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 1-2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியில் ஊற்றி கிளறினால், தேங்காய் தயிர் சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
