Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
Coconut Coriander Chicken Curry Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவுக்கான நாள் என்று மாறிவிட்டது. ஆனால் சண்டே மட்டும்தான் அசைவம் சாப்பிட வேண்டுமா? அப்படியொன்றும் சட்டமில்லையே. நாம் விரும்பும் போதெல்லாம் ஆசைப்படும் உணவை சாப்பிடும் உரிமை நமக்கு நிச்சயம் உள்ளது. பொதுவாக அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.

சமைப்பது என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. அடுத்த முறை சிக்கன் வாங்கினால் அதை வழக்கமான குழம்பு, வறுவல், சிக்கன் 65 என செய்யாமல் வித்தியாசமாக தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் வறுவல் செய்வதற்கு எளிதானது, அதேசமயம் இதன் சுவை அலாதியானது. இது சாதம், பிரியாணி மற்றும் இட்லி, தோசை போன்றவற்றுக்கு அருமையாக இருக்கும்.
உங்களுக்கு தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 இன்ச் இஞ்சி
- 8 பூண்டு பல்
- 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 பெரிய தக்காளி நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- ஒரு எலுமிச்சையின் சாறு
அரைக்க:
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1 கப் கொத்தமல்லி இலை
- 1/4 கப் புதினா இலைகள்
- 2 பச்சை மிளகாய்
- 5 முந்திரிப்பருப்பு
பொடியாக அரைக்க:
- 2 துண்டு இலவங்கப்பட்டை
- 4 ஏலக்காய்
- 6 கிராம்பு
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
- பின்னர் சுத்தம் செய்து வைத்த சிக்கன், உப்பு மற்றும் அரைத்த பொடியைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- சிக்கனை மூடி வைத்து, அவ்வப்போது கிளறியவாறு, கிட்டத்தட்ட வேகும் வரை சமைக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி துண்டுகளைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- இறுதியாக எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான தேங்காய் கொத்தமல்லி சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications