Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி- தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த 3 பொருட்களை மட்டும் சேர்த்துக்கோங்க!
Hotel Style Coconut Chutney Recipe: இட்லி, தோசைக்கு பிரதான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி என்பது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான ஒன்று. என்னதான் வீட்டில் சுவையாக செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடும் தேங்காய் சட்னியின் சுவை எப்போதும் ஒருபடி மேலே இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் சில ரகசிய பொருட்கள்தான். அது தெரியாமல் தான் நாம் வீட்டில் பலவற்றை முயற்சி செய்திருப்போம்.

ஆனால் அந்த சுவை கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் அதையும் விட்டிருப்போம். உங்கள் வீட்டில் இருக்கும் இந்த சில சாதாரணப் பொருட்களை சேர்த்து அரைத்துப் பாருங்கள், ஹோட்டல் தேங்காய் சட்னியின் சுவை உங்கள் வீட்டு சட்னியிலும் இருக்கும். ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் - ½ மூடி
- பச்சை மிளகாய் - 3
- நிலக்கடலை - ஒரு கைப்பிடி
- பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- உடைத்த உளுந்து - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தேங்காயை உடைத்து அரை முடியை துருவியோ அல்லது நறுக்கியோ வைத்து
கொள்ளுங்கள்.
- சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைக்கவும்.
- நிலக்கடலையை வாணலியில் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து தோல்
நீக்கி கொள்ளவும்அல்லது கடைகளில் கிடைக்கும் வறுத்த நிலக்கடலையை
வாங்கியும் தோல் நீக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
- அதே வாணலியில் கடலை பருப்பை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல்
நன்றாக வறுத்து ஆற விடவும்.
- இஞ்சியின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வறுத்த
நிலக்கடலை, மற்றும் கடலை பருப்பை சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, மற்றும்
புளி சேர்க்கவும்.
- கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து
அரைத்து கொள்ளவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் உடைத்த உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- பின் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
- அதை பாத்திரத்தில் இருக்கும் சட்னி உடன் சேர்த்து நன்றாக கலந்தால்
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications