Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தேங்காய் சேர்க்காமலே தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Coconut Chutney Without Coconut In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு சட்டென்று ஒரு சட்னி செய்வதாக இருந்தால், பலரும் முதலில் செய்வது தேங்காய் சட்னி தான். அதுவும் அந்த தேங்காய் சட்னியை நீர் போன்று அரைத்தால், சாப்பிட இன்னும் பிரமாதமாக இருக்கும்.
ஆனால் தேங்காய் சட்னியை அரைக்க வீட்டில் தேங்காய் இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். தேங்காய் இல்லாமலே தேங்காய் சட்னியை செய்யலாம். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் இல்லாத தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இல்லாத தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 1
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து, மிக்சர் ஜாரில் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை
சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு, புளி
ஆகியவற்றை சேர்த்து,, சிறிது நீரை ஊற்றி நன்று மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சட்னிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்,
பெருங்காளத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து
வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய்
சேர்க்காத தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications