Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
6 பிரட்டும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
Coconut Bread Urundai Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்குமாறு ஒரு அசத்தலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்யாமல், சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் பிரட்டும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு உருண்டை செய்து கொடுங்கள். இந்த உருண்டையில் பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை வைத்து செய்வதால், இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பிரட் உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பிரட் உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 6
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 4
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம்/உலர் திராட்சை - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பிரட்டை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் வாசனைக்கு
ஏலக்காயை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து, நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை சேர்த்து, அத்துடன் காய்ச்சி
குளிர வைத்த பாலை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, கைகளால் நன்கு சப்பாத்தி
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி தட்டையாக தட்டி, அதன்
நடுவே பாதாம் அல்லது உலர் திராட்சையை வைத்து உருட்டிக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான தேங்காய் பிரட் உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications