Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
சின்ன வெங்காயமும், வரமிளகாயும் வெச்சு.. ஒருடைம் இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Chinna Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் டிபனாக இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் 10 நிமிடத்தில் சட்னி செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், வரமிளகாயும் இருந்தால், அருமையான சுவையில் சட்னி செய்யலாம்.
இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சட்னியும் கூட. இதனால் அவசர காலத்தில் இந்த சட்னி கைக்கொடுக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை தனித்துவமாகவும், அருமையாகவும் இருக்கும்.

உங்களுக்கு சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து, கருப்பாகும் வரை வறுத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், புளி மற்றும் சிறிது உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது
உப்பு தூவி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு 5 நிமிடம் பச்சை வாசனை
போக வேக வைத்து இறக்கினால், சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











