Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலா.. ஈவ்னிங் டைம்-ல சிக்கன் வெச்சு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு எல்லாரையும் அசத்துங்க...
Christmas Special Chicken Bread Pockets Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இப்பண்டிகையை கொண்டாடும் விதமாக அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள். அதுவும் நீங்கள் மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால் சிக்கன் மற்றும் பிரட் கொண்டு அட்டகாசமான சுவையில் சிக்கன் பிரட் பாக்கெட்டை செய்யுங்கள். இந்த ஸ்நாக்ஸ் இதுவரை உங்கள் வீட்டில் உள்ளோர் யாரும் சுவைத்திராத வகையில் வித்தியாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் பிரட் பாக்கெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பிரட் பாக்கெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட்
உள்ளே வைப்பதற்கு...
* பெரிய தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* முந்திரி - 10 (நீரில் ஊற வைத்தது)
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைகேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை அரைத்து தனியாக ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் முந்திரியை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் சேர்த்து உருகியதும, அதில் எலும்பில்லாத சிக்கனை நீரில்
கழுவி சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
கிளறி, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கியதும், மிளகாய் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, அரைத்து
வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கிளறி 2
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, கசூரி மெத்தியை கசக்கி
தூவி கிளறி இறக்கினால், உள்ளே வைப்பதற்கான மசாலா தயார்.
* பின்பு 1 பிரட் துண்டை எடுத்து, சப்பாத்தி உருட்டும் கட்டையால்
தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வட்டமான கிண்ணத்தை எடுத்து, பிரட்டை வட்டமான வடிவில்
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே சிக்கன் மசாலாவை வைத்து, பிரட்டின் முனைகளில்
நீரைத் தடவி, மடித்து முனைகளை அழுத்தி விட வேண்டும். இதேப் போன்று
அனைத்து பிரட்டையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், மடித்து வைத்துள்ள பிரட்
பாக்கெட்டுகளைப் போட்டு, முன்னும், பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து
எடுத்தால், சுவையான சிக்கன் பிரட் பாக்கெட் தயார்.



Click it and Unblock the Notifications