Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ரௌனி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Christmas Special Brownie Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கிறிஸ்துமஸ் நாளில் கேக் வெட்டி கொண்டாடுவார்கள். நீங்கள் இதுவரை கடைகளில் தான் கேக் வாங்குவீர்களானால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டிலேயே சாதாரண கேக் செய்யாமல், ப்ரௌனி கேக்கை செய்யுங்கள்.
இந்த வகை கேக் மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ப்ரௌனி கேக்கை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ரௌனி கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* டார்க் சாக்லேட் - 70 கிராம்
* வெண்ணெய் - 60 கிராம்
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* சர்க்கரை - 1 கப்
* முட்டை - 2
* மைதா - 1 கப்
* கொக்கோ பவுடர் - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
டாப்பிங்ஸ்...
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சாக்லேட் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வால்நட்ஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சாக்கோ சிப்ஸ் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் டார்க் சாக்லேட், வெண்ணெயை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சாக்லேட் கிண்ணத்தை வைத்து, டபுள்
பாயிலிங் முறையில் சாக்லேட் மற்றும் வெண்ணெயை கரைத்து தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் நாட்டுச்சர்க்கரை, சர்க்கரையை சேர்த்து ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பெரிய பௌலில் அரைத்த சர்க்கரை பொடியை எடுத்து,
அத்துடன் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கரைத்த சாக்லேட்டுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு அத்துடன் மைதா கலவையை சேர்த்து, வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி
கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் மிதமான
தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின்பு கேக் ட்ரேயில் பட்டர் பேப்பரை வைத்து, அதில் சிறிது நெய்யை
தடவி, கலந்து வைத்துள்ள மாவை அப்படியே ஊற்ற வேண்டும்.
* பின் அதன் மேல் நறுக்கிய பாதாம், வால்நட்ஸை தூவி, பொடியாக நறுக்கிய
சாக்லேட் மற்றும் சாக்கோ சிப்ஸை தூவ வேண்டும்.
* 10 நிமிடம் குக்கர் சூடானதும், குக்கரைத் திறந்து, அதில் கேக்
ட்ரேயை வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, 20-25 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கேக் ட்ரேயை குளிர வைக்க
வேண்டும்.
* பின் ட்ரேயை திருப்பிப் போட்டு தட்டினால், சுவையான ப்ரௌனி
தயார்.



Click it and Unblock the Notifications