Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கிறிஸ்துமஸ்-க்கு முட்டை சேர்க்காமல் ப்ளம் கேக் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Christmas Special Eggless Plum Cake Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ப்ளம் கேக் தான் நினைவிற்கு வரும். இந்த ப்ளம் கேக்கை உங்கள் வீட்டிலேயே செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் முட்டை சேர்க்காமல் பஞ்சு போன்று மென்மையாக கேக் செய்ய வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் கேக் செய்யுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் ஓவன் இல்லையா? கவலை வேண்டாம், பாத்திரத்திலேயே எளிதில் செய்யலாம்.
உங்களுக்கு முட்டை சேர்க்காத ப்ளம் கேக்கை எப்படி ஓவன் இல்லாமல் பாத்திரத்தில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேர்க்காமல் செய்யும் ப்ளம் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ஆரஞ்சு ஜூஸ் - 1/2 கப்
* பாதாம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கருப்பு உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* பேரிச்சம் பழம் - 1 (பொடியாக நறுக்கியது)
* டூட்டி புரூட்டி - 1/4 கப்
ஸ்பைஸ் பவுடருக்கு...
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* ஜாதிபத்திரி - 1 இழை
* ஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன்
* சுக்கு - சிறிய துண்டு
கேரமல் சிரப்பிற்கு...
* சர்க்கரை - 1/3 கப்
* தண்ணீர் - 1/2 கப்
அரைப்பதற்கு...
* சர்க்கரை - 1/4 கப்
* ஸ்பைஸ் பவுடர்
* வெண்ணெய் - 1/3 கப்
* புளிக்காத கெட்டி தயிர் - 1/4 கப்
கேக்கிற்கு...
* மைதா - 1 கப்
* கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூஸை எடுத்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, கருப்பு உலர் திராட்சை,
பேரிச்சம் பழம், டூட்டி புரூட்டி ஆகியவற்றை சேர்த்து கலந்து,
குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பைஸ் பவுடருக்கு மிக்சர் ஜாரில் சர்க்கரை, பட்டை,
கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, ஜாதிக்காய், சுக்கு ஆகியவற்றை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு கேரமல் சிரப்பிற்கு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில்
சர்க்கரையை பரப்பி விட்டு, சர்க்கரை கரைந்ததும், கரண்டியால் தொடர்ந்து
கிளறி விட வேண்டும். சர்க்கரையானது பொன்னிறமாக மாறியதும், அதில் 1/2
கப் நீரை ஊற்றி கிளறி இறக்கி, ஊறிக் கொண்டிருக்கும் நட்ஸ்களுடன்
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் 1/4 கப் சர்க்கரை, ஸ்பைஸ் பவுடர்
சேர்த்து, வெண்ணெய் மற்றும் புளிக்காத கெட்டி தயிரை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு மிக்ஸிங் பௌலை எடுத்து, அதன் மேல் ஒரு சல்லடையை வைத்து,
அதில் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு
சேர்த்து நன்கு சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள சர்க்கரை ஸ்பைஸ் பவுடர் கலவையை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள நட்ஸ் கலவையை சேர்த்து ஒரே திசையில்
கலவையை கலந்து விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது, சற்று
கெட்டியாக இருப்பது போன்று இருக்கும். அப்போது அதில் காய்ச்சி ஆற
வைத்த 1/4 கப் பாலை சேர்த்து ஒரே திசையில் கிளறி விட வேண்டும்.
* பிறகு பேக்கிங் ட்ரேயை எடுத்து, அதில் பட்டர் பேப்பரை விரித்து,
மேலே வெண்ணெய் தடவி அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒருமுறை ட்ரேயை
தரையில் சமமாக தட்ட வேண்டும்.
* பின்பு அந்த கேக் கலவையின் மேல் பரப்பை டூட்டி புரூட் மற்றும்
நட்ஸ்களால் அலங்கரிக்க வேண்டும்.
* அடுத்து பாத்திரத்தில் கேக் செய்வதாக இருந்தால், அந்த பாத்திரத்தை
அடுப்பில் வைத்து, அடியில் சர்க்கரை அல்லது உப்பு அல்லது மண்ணை
பரப்பி, மேலே ஒரு ஸ்டாண்ட்டை வைத்து மூடி, மிதமான தீயில் வைத்து 15
நிமிடம் சூடேற்ற வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, உள்ளே கேக் ட்ரேயை வைத்து
மூடி, மிதமான தீயில் வைத்து 45 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கேக் நன்கு வெந்துவிட்டதா என்பதை பார்க்க ஒரு டூத் பிக் குச்சியைக்
கொண்டு குத்தி பார்த்தால், மாவு குச்சியில் ஒட்டாமல் இருக்க
வேண்டும்.
* பின் கேக்கை இறக்கி, நன்கு குளிர வைக்க வேண்டும்.
* கேக் நன்கு குளிர்ந்துவிட்டால், பின் ட்ரேயில் இருந்து கேக்கை
எடுத்தால், சுவையான முட்டை சேர்க்காமல் ப்ளம் கேக் தயார்.



Click it and Unblock the Notifications