Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ளம் கேக் பால்ஸ்
உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில், அதே சமயம் அதிகமான பொருட்கள் பயன்படுத்தாமல் சிம்பிளாக ஒரு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபி செய்ய விரும்பினால், ப்ளம் கேக் பால்ஸ் செய்யுங்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டிலேயே பல வித்தியாசமான கேக் ரெசிபிக்களை செய்ய நினைப்பார்கள். உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில், அதே சமயம் அதிகமான பொருட்கள் பயன்படுத்தாமல் சிம்பிளாக ஒரு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபி செய்ய விரும்பினால், ப்ளம் கேக் பால்ஸ் செய்யுங்கள். இது அனைவருமே செய்யக்கூடிய வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டது.

இப்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ளம் கேக் பால்ஸ் எப்படி செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ளம் கேக் / ஃபுரூட் கேக் - 2 கப்
* பட்டர் க்ரீம் - 3-4 டேபிள் ஸ்பூன்
* டார்க் சாக்லேட் - ஒரு கப்
* ஸ்பிரிங்கல்ஸ் (Sprinkles) - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ப்ளம் கேக் அல்லது ஃபுரூட் கேக்கை உதிர்த்து விட வேண்டும்.
* பின் அதில் பட்டர் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து குளிர வைக்கவும்.
* பிறகு ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
* பின் ஃப்ரிட்ஜில் உள்ள உருண்டைகளை எடுத்து, ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒரு ஸ்பூன் உருகிய சாக்லேட்டை ஊற்றி, மேலே ஸ்பிரிங்கல்ஸ் தூவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டால், சுவையான ப்ளம் கேக் பால்ஸ் தயார்.
குறிப்பு:
ஸ்பிரிங்கல்ஸ் இல்லாவிட்டால் விருப்பமுள்ளவர்கள் ப்ளம் கேக் பால்ஸ் மேலே நட்ஸ் அல்லது உலர் பழங்களைத் தூவிக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications