Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஒருவாட்டி சிக்கன் கிரேவியை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு சும்மா அல்டிமேட்டா இருக்கும்..
Christmas Special Chicken Gravy In Tamil: கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் வீட்டில் காலையில் ஸ்பெஷலாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அதுவும் பூரி, சப்பாத்தி செய்து, அதற்கு சிக்கன் சைடு டிஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் கிரேவியை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை மசாலா ஒன்றை அரைத்து சேர்த்து கிரேவி செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட இருமடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்த அளவு கிரேவி சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தேங்காய் - 3 சில்லு (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சமையல் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 2
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 3/4 கிலோ
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் முந்திரி மற்றும் கசகசாவை போட்டு,
சிறிது சுடுநீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், மிளகு, ஊற வைத்த
முந்திரி மற்றும் கசகசா, சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் மற்றும் சமையல்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ,
பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து, அத்துடன் மல்லித் தூள்,
மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
தேங்காய் வெங்காய விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி,
உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக அதில் 2 பச்சை மிளகாயை கீறி சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லியைத் தூவி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் இன்னும் சிறிது
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications