Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீஸ்கேக் ப்ரௌனீஸ்
நீங்கள் இதுவரை கடைகளில் ப்ரௌனீஸ் வாங்கி சுவைத்திருந்தால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான மற்றும் சுவையான கேக் செய்ய விரும்புகிறீர்களா? வழக்கமாக செய்யும் கேக்கை விட, இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக ப்ரௌனீஸ் செய்யுங்கள். அதுவும் சீஸ்கேக் ப்ரௌனீஸ் செய்யுங்கள். ப்ரௌனீஸ் பஞ்சு போன்று மிகவும் மென்மையாக, சாக்லேட் சுவையுடன் இருக்கும். எனவே இந்த ப்ரௌனீஸ் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ருசியாக இருக்கும். நீங்கள் இதுவரை கடைகளில் ப்ரௌனீஸ் வாங்கி சுவைத்திருந்தால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சீஸ் பேக் ப்ரௌனீஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸ்கேக் ப்ரௌனீஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ரௌனீஸ் செய்வதற்கு...
* வெண்ணெய் - 1/2 கப் (உருக்கியது)
* சர்க்கரை - 1 கப்
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
* முட்டை - 2
* சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப் (உருக்கியது)
* மைதா - 3/4 கப்
* கொக்கோ பவுடர் - 1/4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
சீஸ்கேக் லேயருக்கு...
* க்ரீம் சீஸ் - 100 கிராம்
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1
* வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஓவனை 180 டிகிரி C-யில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் 9x9 இன்ச் சதுர கேக் பேனில் பார்ச்மென்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் மற்றும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மைதா, கொக்கோ பவுடர், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
* அடுத்து அதில் உருக்கிய சாக்லேட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கேக் பேனில் இந்த கலவையை ஊற்றி பரப்பி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் க்ரீம் சீஸ், சர்க்கரை, ஒரு முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கேக் பேனில் மேலே ஊற்றி பரப்பி விட வேண்டும்.
* பின்பு அதை ஒவனில் வைத்து, 30-35 நிமிடம் பேக் செய்து வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக அதை துண்டுகளாக்கினால், சுவையான சீஸ்கேக் ப்ரௌனீஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
