Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரோஸ் மில்க் கேக் - எப்படி ஈஸியாக செய்றது-ன்னு பாருங்க...
Christmas Special Rose Milk Cake Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கேக் செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா? பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே ப்ளம் கேக் தான் செய்வார்கள்.
ஆனால் இந்த வரும் ஸ்பெஷலாக கேக் செய்ய நினைத்தால், ரோஸ் மில்க் கேக் செய்யுங்கள். இந்த கேக் நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். அதோடு இதுவரை சுவைத்திராத ஒன்றாகவும் இருக்கும்.

உங்களுக்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரோஸ் மில்க் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோஸ் மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ச்சி ஆற வைத்த பால் - 3/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* ரிபைன்டு எண்ணெய் - 1/2 கப்
* ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் ஃபுட் கலர் - சிறிது
* மைதா - 2 கப்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
கெட்டியான ரோஸ் மில்க் செய்வதற்கு...
* பால் - 1 கப்
* கன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
க்ரீம் செய்வதற்கு...
* விப்டு க்ரீம் - 200 மிலி
* ஐசிங் சுகர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, அத்துடன்
சர்க்கரை, தயிர், ரிபைன்டு எண்ணெய், ரோஸ் சிரப் மற்றும் ரோஸ் ஃபுட்
கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பௌலின் மேல் மாவு சலிக்கும் சல்லடையை வைத்து,
அந்த சல்லடையில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து
சலிக்க வேண்டும்.
* பின்பு சலித்து வைத்துள்ள மாவை, மற்றொரு பௌலில் உள்ள ரோஸ் பாலுடன்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் கேக் ட்ரேயை எடுத்து, அதில் பட்டர் பேப்பரை வைத்து, வெண்ணெய்
தடவி, பின் கலந்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றி, ஒருமுறை தரையில்
தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஓவனை 180 டிகிரி C-யில் 15 நிமிடம் சூடேற்ற வேண்டும்.
* பின் அதே 180 டிகிரி C-யில் கேக் ட்ரேயை ஓவனில் வைத்து, 30 நிமிடம்
பேக் செய்ய வேண்டும்.
* பின்பு கேக்கை வெளியே எடுத்து, குளிர வைத்து கேக்கை வெளியே எடுத்து,
அதில் உள்ள பட்டர் பேப்பரை அகற்றி விட வேண்டும்.
* பின் கேக்கின் மேல் சமமில்லாமல் உப்பி இருக்கும் பகுதியை வெட்டி
நீக்கிவிட வேண்டும்.
* அதன் பின் ஒரு பௌலில் கெட்டியான ரோஸ் மில்க்கை தயார் செய்ய
வேண்டும். அதற்கு ஒரு பௌலில் பால், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் ரோஸ்
சிரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு செய்து வைத்துள்ள கேக்கை மீண்டும் ட்ரேயில் வைத்து, கேக்கின்
மேல் ரோஸ் மில்க்கை ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க
வேண்டும்.
* அதற்குள் ஒரு பௌலில் விப்டு கிரீம்மை எடுத்து அதை ஒரு 2 நிமிடம்
பிளெண்டர் கொண்டு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஐசிங் சுகரை சேர்த்து 15 நிமிடம் நன்கு அடித்துக்
கொண்டால், க்ரீம் தயார்.
* இறுதியாக ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள கேக்கை எடுத்து, அதன் மேல் அடித்து
வைத்துள்ள க்ரீம்மை சரிசமமாக பரப்பி, மேலே பொடியாக நறுக்கிய பாதாம்
மற்றும் பிஸ்தாவை தூவி, சிறிது ரோஜாப்பூ இதழ்களையும் தூவி
அலங்கரித்தால், சுவையான ரோஸ் மில்க் கேக் தயார்.



Click it and Unblock the Notifications








