Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சின்ன வெங்காய குழம்பு
மதிய வேளையில் என்ன குழம்பு வைப்பதென்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயத்தை தவிர காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டே சுவையான மற்றும் சிம்பிளான குழம்பு செய்யலாம்.
மதிய வேளையில் என்ன குழம்பு வைப்பதென்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயத்தை தவிர காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டே சுவையான மற்றும் சிம்பிளான குழம்பு செய்யலாம். இந்த சின்ன வெங்காய குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது செய்வது மிகவும் சுலபம். எனவே இதை பேச்சுலர்களும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு சின்ன வெங்காய குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கிழே சின்ன வெங்காய குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/4 கப்
* வெங்காய வடகம் - 6 (விருப்பமிருந்தால்)
* சின்ன வெங்காயம் - 20 (தோலுரித்தது)
* புளிச்சாறு - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை/வெல்லம் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-8
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகம் சேர்த்து வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாறு மற்றும் சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த வெங்காய வடகத்தை சேர்த்து கிளறி, மூடி வைத்து 20-25 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சின்ன வெங்காய குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications