Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
2 கைப்பிடி சின்ன வெங்காயமும், 2 கைப்பிடி கறிவேப்பிலையும் இருந்தா.. சாதத்துக்கு இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்
Chinna Vengaya Kariveppilai Thogayal Recipe In Tamil: உங்களுக்கு மதிய வேளையில் சமைக்க பிடிக்கவில்லையா? சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் சாம்பார், புளிக்குழம்பு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் துவையலை செய்யுங்கள். அதுவும் 2 கைப்பிடி சின்ன வெங்காயமும், 2 கைப்பிடி கறிவேப்பிலையும் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் துவையலை செய்யுங்கள்.
இந்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த துவையல் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த துவையலில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை செரிமானத்திற்கும், இதயத்திற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், எடை இழப்புக்கும் உதவுகிறது. எனவே அடிக்கடி துவையலை செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு சின்ன வெங்காய கறிவேப்பிலை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய கறிவேப்பிலை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 6-8
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - நெல்லிக்காய் அளவு
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் பூண்டு
பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நெல்லிக்காய் அளவு புளி மற்றும் 2 கைப்பிடி சின்ன
வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் 2 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, கறிவேப்பிலை சுருங்க வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீரை ஊற்றாமல்
நன்கு அரைத்து எடுத்தால், சுவையான சின்ன வெங்காய கறிவேப்பிலை துவையல்
தயார்.



Click it and Unblock the Notifications











