Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
20 சின்ன வெங்காயம் இருந்தா.. இந்த பக்குவத்துல கார குழம்பு செய்யுங்க.. 2 நாளானாலும் கெட்டுப்போகாது..
Chinna Vengaya Kara Kuzhambu Recipe In Tamil: மதியம் உங்கள் வீட்டில் சமைக்க காய்கறி எதுவும் இல்லையா? சிம்பிளா சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் 20 சின்ன வெங்காயம் இருக்கா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டு கார குழம்பு செய்யுங்கள்.
இப்படி இந்த பக்குவத்தில் கார குழம்பு செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த கார குழம்பை செய்தால் 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக பிரமாதமாக இருக்கும். இந்த குழம்பை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, அப்பளத்துடன் சாப்பிடும் போது, சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு சின்ன வெங்காய கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (அரைத்தது)
* புளி - எலுமிச்சை அளவு (1/2 லிட்டர் நீரில் ஊற வைத்தது)
* வெல்லம் - சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் எலுமிச்சை அளவு புளியை 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்து,
சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள், மஞ்சள்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு எண்ணெய் பிரிய
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான சின்ன வெங்காய கார குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











