Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க கோடீஸ்வரராகப் போறாங்களாம் - உங்க ராசி என்ன? -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு!
சின்ன வெங்காயம், வரமிளகாய் வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. 1 இட்லி சாப்பிடுறவங்க 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Chinna Vengaya Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் வீட்டில் சின்ன வெங்காயமும், வரமிளகாயும் இருந்தால், அற்புதமான சுவையில், மிகவும் எளிய முறையில் ஒரு சூப்பரான சட்னியை செய்யலாம்.
இந்த சின்ன வெங்காய சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது வேலைக்கு செல்பவர்கள் காலையில் சீக்கிரம் செய்யக்கூடிய வகையிலும் இருக்கும். சொல்லப்போனால் இந்த சட்னியை செய்தால், 1 இட்லியை சாப்பிடும் உங்கள் பிள்ளைகள் இன்னொரு இட்லியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 25 (தோலுரித்தது)
* பூண்டு - 2-3 பல்
* காஷ்மீரி வரமிளகாய் - 6
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நல்லெண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும்
வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி
தயார்.
குறிப்பு
* இந்த சட்னிக்கு சின்ன வெங்காயம் மட்டுமின்றி பெரிய
வெங்காயத்தையும் சேர்க்கலாம்.
* நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால், சட்னி இன்னமும் சுவையாக
இருக்கும்.
* வரமிளகாய்க்கு பதிலாக மிளகாய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெங்காயத்தை மிகவும் மென்மையாக அரைத்துவிட வேண்டாம்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











