Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன்
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சைனீஸ் ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இந்த வாரம் சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சைனீஸ் ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இந்த வாரம் சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு...
* எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 500 கிராம்
* சோள மாவு - 5 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* க்ரீன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* வினிகர் - 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் கலந்தது)
* மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - அலங்கரிப்பதற்கு...
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், சோள மாவு, சோயா சாஸ், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு 15 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை வறுத்த மீதமுள்ள எண்ணெயில் சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து குடைமிளகாய், சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த சிக்கன் துண்டுகள், கரைத்து வைத்துள்ள சோள மாவு நீர், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு தீயை அதிகரித்து கிளறி, உங்களுக்கு கிரேவி வேண்டுமானால் அப்படியே அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரையாக வேண்டுமானால், கெட்டியாகும் வரை கிளறி, பின் இறக்குங்கள்.
* இறுதியாக மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி இறக்கினால், சுவையான சைனீஸ் ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
