Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
சைனீஸ் நூடுல்ஸ்
சைனீஸ் ரெசிபிக்களில் உங்களுக்கு சைனீஸ் நூடுல்ஸ் பிடிக்குமா? அப்படியானால் அந்த சைனீஸ் நூடுல்ஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். சைனீஸ் நூடுல்ஸ் செய்வது மிகவும் சுலபம்.
நீங்கள் சைனீஸ் ரெசிபிக்களை அதிகம் விரும்பி சாப்பிடுவீர்களா? சைனீஸ் ரெசிபிக்களை சாப்பிடுவதற்காகவே அடிக்கடி ஹோட்டல்களுக்கு செல்வீர்களா? ஹோட்டல்களில் அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். சைனீஸ் ரெசிபிக்கள் பிடிக்குமானால், அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அதுவும் சைனீஸ் ரெசிபிக்களில் உங்களுக்கு சைனீஸ் நூடுல்ஸ் பிடிக்குமா? அப்படியானால் அந்த சைனீஸ் நூடுல்ஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். சைனீஸ் நூடுல்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த சைனீஸ் நூடுல்ஸை பேச்சுலர்களும் செய்யலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சைனீஸ் நூடுல்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைனீஸ் நூடுல்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை நூடுல்ஸ் - 1 பாக்கெட்
* முட்டை - 3
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டை நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, அதில் சிறிது எணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சோயா சாஸ், வினிகர் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு பொடிமாஸ் செய்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சோயா சாஸ் கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அதில் முட்டை பொடிமாஸை சேர்த்து, மிளகுத் தூளைத் தூவி கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறினால், சுவையான சைனீஸ் நூடுல்ஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
