Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சில்லி இறால்
இறாலைக் கொண்டு கிரேவி, வறுவல், 65 என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சில்லி இறால் செய்து சாப்பிடுங்கள்.
இந்த வார விடுமுறையில் வீட்டில் இறால் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? இறாலைக் கொண்டு கிரேவி, வறுவல், 65 என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சில்லி இறால் செய்து சாப்பிடுங்கள். இந்த சில்லி இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு மிகவும் சுவையாக இருக்கும். இதோடு இது ஒரு அற்புதமான ஸ்டாட்டராகவும் இருக்கும்.

உங்களுக்கு சில்லி இறால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி இறால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* இறால் - 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு...
* நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
* சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி தனியாக ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகா சேர்த்து நன்கு வதக்கி, பின் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியால் மூடி குறைவான தீயில் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இறாலைக் கிளறி விட்டு, மீண்டும் 2 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இறால் நன்கு வெந்ததும், அதன் மேல் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி இறால் தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications